அல்-குர்ஆனை அவமதித்த மாணவர் வழக்கு: KUJAKAக்கு விசாரணை ஆவணம் அனுப்பிய போலீஸ்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 2-

பொது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அல்-குர்ஆனை மிதித்ததாகவும், நபி முகம்மதை அவமதிக்கும் பதிவுகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணத்தை போலீசார் மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளனர்.

ச்குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர், சந்தேக நபர் மீது ரிமாண்ட் முடிந்தவுடன் குற்றச்சாட்டு சுமத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “விசாரணை ஆவணம் Ketua Unit Jenayah Am dan Ketenteraman Awam (KUJAKA) பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து மேலதிக உத்தரவு வருவதற்காக காத்திருக்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

முன்னதாக வெளியான தகவல்களின் படி, குறித்த மாணவர் அல்-குர்ஆனை மிதித்த புகைப்படத்தையும், நபி முகமது  அவர்களை அவமதிக்கும் வகையிலான பதிவுகளையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது விதிக்கப்பட்டிருந்த ரிமாண்ட் காலம் மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டு வரும் செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *