நடிகர் அர்ஜுன் தாஸ் திருமணம்? - “பரவும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி” - பிஆர்ஓ விளக்கம்

top-news
FREE WEBSITE AD

சென்னை, மே 27-

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் Arjun Das திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு அவரது தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் “வெறும் வதந்தி” என அவரது பிஆர்ஓ மற்றும் மேலாளர் விளக்கம் அளித்துள்ளனர்.

‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அர்ஜுன் தாஸ், சமீபத்தில் திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர்.

இந்த நிலையில், அர்ஜுன் தாஸின் மேலாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் அர்ஜுன் தாஸின் திருமணம் குறித்து பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. ஊடக நண்பர்கள் எந்த செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு தயவுசெய்து எங்களிடம் உறுதி செய்யவும்,” என்று தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *