உக்ரைன், ஜெர்மனிக்கு எதிரான போக்கைக் கைவிட கோரிக்கை: நிராகரித்த ரஷியா
- Surendran Sumdraraj
- 28 Sep, 2026
நியூயார்க்: ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டணிக்கு எதிரான ஆபத்தான மோதல் போக்கை ரஷியா கைவிட வேண்டும் என்ற ஜெர்மனியின் கோரிக்கையை ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-ஆவது கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஜோஹன் வாதேபுல் மற்றும் லாவ்ரோவ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 2022-ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் நடத்திய முதல் நேரடி சந்திப்பாக இது கருதப்படுகிறது.
சந்திப்பின்போது ரஷியா தனது மோதல் போக்கை கைவிட வேண்டும் என வாதேபுல் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த லாவ்ரோவ், ஜெர்மனி தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கி வருவதாக விமர்சித்தார். மேலும், ஐரோப்பாவில் முன்னணி ராணுவ சக்தியாக மாற ஜெர்மனி முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



