என்னுடன் மோதுவதில் ஆர்வமா? இல்லை தபோங் ஹாஜி பிரச்னை மீது ஆர்வமா? எதிர்க்கட்சிக்கு அன்வார் கேள்வி
- Shan Siva
- 11 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 11: தபோங் ஹாஜி மீதான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக இன்று நடைபெற்ற சிறப்பு அமர்வின்போது, பெரிகாத்தான் நேஷனல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்ததையடுத்து, பிரதமர் அன்வர் இப்ராஹிம் அக்கட்சிக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார்.
எதிர்க்கட்சிகள்
மக்களவையில் தன்னுடன் மோத விரும்புகின்றனவா அல்லது ஹஜ் பயணிகளுக்கான நிதியத்தின்
நிர்வாகம், முதலீடு மற்றும்
நிதி மேலாண்மையில் உள்ள கடுமையான பலவீனங்களை வெளிப்படுத்திய TH அறிக்கை குறித்து விவாதிக்க விரும்புகின்றனவா
என்று அன்வர் கேள்வி எழுப்பியிருந்தார்.
நீங்கள் என் மீது
அதிக ஆர்வம் காட்டுகிறீர்களா அல்லது தாபோங் ஹாஜிக்கு இழைக்கப்பட்ட துரோகத்தின்
மீது அதிக ஆர்வம் காட்டுகிறீர்களா?
மலாய்-முஸ்லிம்கள்
காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர், ஆனாலும் இன்னும்
சிலர் அரசியல் நாடகங்களில் ஈடுபட விரும்புகிறார்கள். அவர்கள்தான்
மலாய்-முஸ்லிம்களின் நலன்களுக்காகப் போராடுவதாக உரக்கக் கூறிக்கொள்கிறார்கள் என்று
அன்வார் குறிப்பிட்டார்.
மேலும், தபோங் ஹாஜியில்
தங்களது சேமிப்பைச் சேர்த்து ஹஜ் கடமையை நிறைவேற்ற காத்திருக்கும் ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் மற்றும்
ஓய்வுபெற்றவர்களின் நலனில் பாஸ் தலைமையிலான பெரிகாத்தான் நேஷனல் உண்மையில் அக்கறை கொண்டுள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இன்று
நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பெரிகாத்தான் நேஷனல்
கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், சபாநாயகர்
ஜொஹாரி அப்துல் அந்தக் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பெரிகாத்தான்
நேஷனல் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Govin
Excellent



