சனூசி மீதான விசாரணை தொடங்கியது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 26: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல்  தேர்தல் இயக்குநர் சனுசி நோர் மற்றும் அம்னோ பிரிவுத் தலைவர் ஒருவர் மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்்சாஃப்னி அகமட் கூறுகையில், இருவருடனும் தொடர்புடைய மேலும் சிலரிடமும் விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றார்.

மலேசியாவின் பல்வேறு இன மக்களுக்கு நாட்டுக்கு வெளியே முன்னோர்களின் தாயகம் இருப்பதாகக் கருதப்படும் வகையில் கெடா மந்திரி பெசார் சனுசி பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக இரண்டு போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“சனுசியை விரைவில் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்வோம். விசாரணையையும் விரைந்து முடிக்க நம்புகிறோம்"  என்று அல்்சாஃப்னி தெரிவித்தார்.

இதற்கிடையில், ரெம்பாவ் அம்னோ தகவல் பிரிவு தலைவர் ஷுக்ரி ஷம்சுடின் மீது 11 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர், டிஏபி அரண்மனை மற்றும் மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தி வருவதால் சில சமூகங்களின் மரியாதை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இரு வழக்குகளிலும் பல சாட்சிகளிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *