ஜஸ்லிண்டாவைத் தேடும் பணியில் பழங்குடியினர்!
- Shan Siva
- 02 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 2: மே 23 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 49 வயதான மலையேறும் வீராங்கனை ஜஸ்லிண்டா சலுதீனைத் தேடும் மற்றும் மீட்கும் (SAR) நடவடிக்கைக்கு உதவ, பழங்குடியினர் சமூகம் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.
மீட்புப் பணியாளர்கள், பாதை இல்லாத பகுதிகளுக்கும் தேடுதலை விரிவுபடுத்துவதால், கம்போங் அம்பாங் வோவைச் சேர்ந்த பழங்குடியினர் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளனர்.
பேராக், தாப்பா அருகே உள்ள குனோங் பத்து பூத்தே மலையில் நடைபெற்ற டிரான்ஸ் ஸ்பென்சர் சாப்மேன் மலையேற்றப் பயணத்தில் பங்கேற்றபோது ஜஸ்லிண்டா காணாமல் போனார்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடன், 12 பழங்குடியினர் தங்கள் சேவைகளை வழங்க வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பாதைகள் மற்றும் நிலப்பரப்பு குறித்த தங்களின் ஆழ்ந்த அறிவைக் காரணம் காட்டி, தேடுதலுக்கு உதவத் தயாராக இருப்பதாக பழங்குடியின சமூகத் தலைவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



