ஸ்காட்லாந்தில் முதல் கோப்பையை வென்ற ரிச்சர்ட் சின்
- Surendran Sumdraraj
- 06 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 6-
ஹரிமாவ் மலாயா அணியின் சார்பில் விளையாடும் வீரர் ரிச்சர்ட் சின், தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் முதல் கோப்பையை ஸ்காட்லாந்தில் கைப்பற்றியுள்ளார். ஸ்காட்டிஷ் சாலஞ்ச் கப் போட்டியின் இறுதிப் போட்டியில் ரைத் ரோவர்ஸ் அணி, இன்வெர்னஸ் கலிடோனியன் திஸ்டில் அணியை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியனாக மாறியது.
இந்த வெற்றி மூலம் 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணியின் நீண்டகால கோப்பை வறட்சியும் முடிவுக்கு வந்துள்ளது. போட்டி தொடக்கம் முதலே தாக்குதல்மிகு ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைத் ரோவர்ஸ், 29ஆவது நிமிடத்தில் உயரமான முன்னணி வீரர் இன்னஸ் கேமரூன் அடித்த கோலின் மூலம் முன்னிலை பெற்றது.
ஆனால் அதற்குப் பிறகு எட்டு நிமிடங்களில் இன்வெர்னஸ் அணியின் அல்பி ஸ்டீவர்ட் சமநிலை கோலை பதிவு செய்து போட்டியை 1-1 என மாற்றினார். முதல் பாதி முடிவடையும் வரை இரு அணிகளும் சமநிலையிலேயே இருந்தன.
இரண்டாம் பாதியில் ரைத் ரோவர்ஸ் முழுமையான கட்டுப்பாட்டுடன் விளையாடி மேலும் மூன்று கோல்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தது. இந்த சாதனை ரிச்சர்ட் சின் மற்றும் அவரது அணிக்கு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



