திரிசூலம் அவமதிப்பு வழக்கு: தமீம் தாரி குற்றச்சாட்டை மறுத்தார்
- Shan Siva
- 21 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 21: லங்காவி, குவாவில் உள்ள பழமையான ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலில் புனிதமான திரிசூலத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் தமீம் தாரி அப்துல் ரசாக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து நீதிமன்றத்தில் விசாரணை கோரியுள்ளார்.
லங்காவி மஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் மஜிஸ்திரேட் ஹெமி அன்னெரினா ஹாஜா மைடின் முன்னிலையில்
குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது, அவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஏற்க மறுத்தார்.
கடந்த மார்ச்
8 அன்று,
செலாட் பாஞ்சோர் பகுதியில் உள்ள
பழமையான ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலின் திரிசூலத்தை, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும்
நோக்கத்துடன் அவமதித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 295-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம்
அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், விசாரணை நடைபெறும் காலத்தில் தமீம் நாட்டை விட்டு தப்பிச்
செல்லக்கூடும் என்பதால், அவருக்கு
ஜாமீன் வழங்க வேண்டாம் என்று அரசு தரப்பு கேட்டுக்கொண்டது.
ஆனால், இது ஜாமீன் வழங்கக்கூடிய குற்றம்
என்றும், தனது கட்சிக்காரர்
தன்னிச்சையாக மலேசியா திரும்பி காவல்துறையிடம் சரணடைந்ததாகவும், கடவுச்சீட்டை ஒப்படைத்து
காவல்நிலையத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்தது.
இதையடுத்து, RM10,000
மதிப்பிலான
இரு நபர் உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்,
கடவுச்சீட்டை
நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள
காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட்
23 அன்று
விசாரணைக்கு வருகிறது.
மார்ச் 17 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக
வேண்டியிருந்த நிலையில், தமீம்
நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். பின்னர் அவர் நான்கு மாதங்களுக்கும் மேலாக
தாய்லாந்தில் தங்கியிருந்து, கிளாந்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக
மலேசியாவுக்குள் நுழைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து,
கடந்த சனிக்கிழமை பிற்பகல், அவர் போர்ட் டிக்சன் மாவட்ட காவல்துறை
தலைமையகத்தில் சரணடைந்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



