டிஜிட்டல் மாற்றத் திட்ட தாமதம், சிக்கல்கள் குறித்து பிரதமர் அன்வார் ஏமாற்றம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 5:

நாட்டின் இரண்டு முக்கிய டிஜிட்டல் மாற்றத் திட்டங்களான MyDigital ID மற்றும் இரண்டாவது 5G நெட்வொர்க்கை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் சிக்கல்கள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது ஏமாற்றத்தைத் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நான்காவது தொழில் புரட்சிக்கான தேசிய கவுன்சில் கூட்டத்தின் போது நேற்று இந்த விஷயம் எழுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட சிக்கலான விஷயங்கள் தனது பொறுமையை சோதித்ததாக நிதியமைச்சர் அன்வார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில் அன்வாரால் அறிவிக்கப்பட்ட MyDigital ID முன்முயற்சி, 1.2 மில்லியன் பயனர்களை பதிவு செய்துள்ளது. மலேசியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் அடையாள அமைப்பாக இது செயல்படும் நோக்கம் கொண்டது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *