தென் கொரியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் அன்வார்!

top-news

புத்ராஜெயா, நவ. 21-

இம்மாதம் 24ஆம் தேதியுடன் பிரதமர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், நாட்டின் திட்டங்களைத் தொடருவதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தென் கொரியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வியூக ஒத்துழைப்பு, மேலும் வலுப்படுத்துவதை உறுதி செய்ய பிரதமரின் இப்பயணம் முக்கியம் என்று ஒருமைப்பாட்டு அமைச்சின் பேச்சாளரும், தொடர்பு அமைச்சருமான ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.

“எம்சிஎம்சி உட்பட பல்வேறு அமைச்சுகள், நிறுவனங்களின் உறவை மேம்படுத்துவதும், வர்த்தக மற்றும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதும் பிரதமர் 24-ஆம் தேதி தென் கொரியாவிற்கு மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ பயணத்தின் நோக்கம், “என்றார் அவர்.

புத்ராஜெயாவில் நேற்று நடைபெற்ற தொடர்பு அமைச்சின் மாதந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு, ஃபாஹ்மி ஃபட்சில் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மலேசியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதோடு மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் உட்பட அமைச்சுகளும் நிறுவனங்களும் சம்பந்தப் பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பிரதமர் கையெழுத்திடவிருப்பதாக, ஃபாஹ்மி தெளிவுப்படுத்தினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்