பிரதமர் பதவிக்காலம் வரம்பு - ஜூன் மாதத்தில் மீண்டும் மசோதா! - ஃபஹ்மி பாட்ஸில்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். மார்ச் 4: பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளுக்கு மிகாமல் கட்டுப்படுத்தும் மசோதா ஜூன் மாதம் நடைபெறும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குக் கொண்டுவரப்படும் என்று அரசு செய்தி தொடர்பாளர்  டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

இந்த மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவை வழங்குவார்கள் என்று தாங்கள் நம்புவதாக செய்தியாளர் சந்திப்பின் போது ஃபஹ்மி கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *