பதவி விலக நேரிடலாம்! பிரதமர் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 20: மாநிலத் தேர்தல்களின் போது பிரச்சாரம் செய்யும் வேளையில், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள பதவிகளை வகிப்பவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளக்கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

பக்காத்தான் ஹரப்பான் தலைவராகவும் இருக்கும் அன்வார், துணைப் பிரதமர்கள் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி மற்றும் ஃபடில்லா யூசோஃப் ஆகியோருடன் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக  நேற்று  ஈப்போவில் உள்ள  சமூக மண்டபத்தில் நடைபெற்ற 'மடானி கிதா' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டாட்சி அளவில் நமது உறவுகள் நல்லுறவுகளைப் பேணுவதற்கும், பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கும்,  நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கூட்டாட்சிப் பதவிகளை வகிப்பவர்கள், மாநிலத் தேர்தல்களை மற்றவர்களைத் தாக்குவதற்கான ஒரு தளமாக மாற்றக்கூடாது என்றும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அன்வர் கூறினார்
அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பினால், அவர்கள் தங்கள் பதவிகளிலிருந்து விலக வேண்டும். எந்த மீறல்களும் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் மீறல் நடந்தால், தாம் அவர்களைப் பதவி விலகுமாறு கேட்பேன்  என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *