சுங்கைபூலோ மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டான்!

top-news

கோலாலம்பூர், செப் 23: சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவன் குவாந்தனில் உள்ள பேருந்து முனையத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டான்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பகாங்கின் குவாந்தன் விரைவு பேருந்து முனையத்தில் இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 23) காலை 11 மணியளவில் சிறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சுங்கை பூலோ சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அந்நபர், சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி தப்பியோடினான்.  

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்