உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டும் வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் வரை சிறை – புதிய சட்டத் திருத்த மசோதா
- Shan Siva
- 21 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 21: ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது
ரத்து செய்யப்பட்டிருந்தாலும் தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள்
சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சாலைப் போக்குவரத்து (திருத்தம்) மசோதா 2026
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா, சாலைப்
போக்குவரத்து சட்டம் 1987-ன் பிரிவு 32-இல் திருத்தம்
கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.
தற்போது அதிகபட்சமாக 1 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், புதிய
திருத்தத்தின்படி அது 3 ஆண்டுகளாக
உயர்த்தப்படும். மேலும், அதிகபட்ச அபராதம்
RM10,000 ஆக
நிர்ணயிக்கப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள், ரத்து
செய்யப்பட்டவர்கள் அல்லது நீதிமன்றத்தால் ஓட்டுநர் உரிமம் பெறத் தடை
செய்யப்பட்டவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் வருவார்கள் என்று அவர் விளக்கினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



