கேஎல்ஐஏவில் போதைப்பொருள் பறிமுதல் மதிப்பு ஆறு மடங்கு உயர்வு
- Surendran Sumdraraj
- 01 Aug, 2026
கோலாலம்பூர், ஆக. 1-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்து 108.35 மில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.
கடந்த ஆண்டு காலகட்டத்தில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பாக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் பதிவான 54 வழக்குகளை விட இரு மடங்கு அதிகமாகும். மேலும், இந்த ஆண்டு 121 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே காலத்தில் 57 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 42 வெளிநாட்டினரும் அடங்குவதாகவும், அவர்கள் நாட்டின் முக்கிய நுழைவாயிலான கேஎல்ஐஏ வழியாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



