இரயில் கேபிள் திருட்டு: 393 சம்பவங்களில் RM16.3 மில்லியன் இழப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 2 –

2024 முதல் கடந்த ஆண்டு வரை இரயில் கேபிள் திருட்டு தொடர்பாக மொத்தம் 393 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் சுமார் 19,756 மீட்டர் கேபிள்கள் திருடப்பட்டதுடன், மொத்த இழப்பு RM16.3 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை வடக்கு பகுதியில் மட்டும் 64 கேபிள் திருட்டு சம்பவங்கள் பதிவாகி, 1,878 மீட்டர் ரயில் கேபிள்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு 141 சம்பவங்களில் 9,699 மீட்டர் கேபிள்கள் திருடப்பட்டதாகவும், 2024-ஆம் ஆண்டில் 188 சம்பவங்களில் 8,179 மீட்டர் கேபிள்கள் திருடப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

ரயில் கேபிள் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பை அரசு மிகக் கடுமையாக எடுத்துக்கொள்கிறது. இது பெரிய அளவிலான நிதி இழப்பை மட்டுமல்லாமல், இரயில் சேவையின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் பொது போக்குவரத்து அமைப்பின் சீரான செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும் என்று அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *