RM 10 லட்சம் ஊழல்! பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் கைது!
- THINAGAREN SANGGAREN
- 15 Apr, 2026
ஏப்ரல் 15,
10 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேலாக ஊழல் செய்ததாக நம்பப்படும் அரசு பொது பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் நேற்று இரவு 8 மணிக்குக் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று புத்ராஜெயா நீதிமன்றம் அவரை 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. 60 வயதுள்ள முன்னாள் அரசு அதிகாரியான டத்தோக் ஒருவர் ஊழலில் தொடர்புள்ளதாகச் செய்திகள் வெளியாகிய நிலையில் இன்று அவர் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கடந்த 2023 முதல் 2025 வரையில் அரசு பொதுபல்கலைக்கழகத்தின்
இயக்குநராகப் பொறுப்பிலிருந்த போது 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலானப் பணத்தைத் தாம்
பங்குதாரராக இருக்கும் தனியார் நிறுவனத்திற்குச் செலுத்தியதாக முதற்கட்ட விசாரணையில்
தெரிய வந்துள்ளதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை இயக்குநர் Datuk Yuhafiz Mohd Salleh, தெரிவித்தார். டத்தோக் பட்டம் பெற்ற அவருடன் தொடர்பிலுள்ள
RM600,000 ரிங்கிட் மதிப்பிலான 4 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் Datuk Yuhafiz Mohd
Salleh, தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



