கடலில் முதலை; கவனம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
- Shan Siva
- 27 Oct, 2026
கோலாலம்பூர், அக் 27: சிலாங்கூர், பாகான் லாலாங் கடற்கரையில் முதலை தென்பட்டதாகச் சந்தேகம் எழுந்துள்ளதால், பொதுமக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள ஓய்வுத் தங்கும் விடுதிக்கு அருகே முதலை தென்பட்டதாகப் புகார் கிடைத்தது என்று சிப்பாங் மாவட்டக் காவல்துறை தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சுங்கை பீலேக்கில் உள்ள பாகான் லாலாங் கடற்கரையில் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். நிலைமையைக் கண்காணிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல்துறை மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

