பந்திங் கால்வாயில் உலா வந்த முதலை!
- Shan Siva
- 15 Jun, 2026
ஷா ஆலம், ஜூன் 15: பந்திங், சுங்கை மங்கிஸில் உள்ள
ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் இருந்த கால்வாயில், மூன்று மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ஒரு முதலை நேற்று பிடிபட்டது.
காலை 9.07
மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, தங்கள் துறை ஒரு குழுவை
சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
உதவி செயல்பாட்டு இயக்குனர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.
200 கிலோவுக்கும்
அதிகமான எடை இருக்கும் என நம்பப்படும் அந்த முதலையைப் பிடிப்பதற்காக, பந்திங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டுப் பணியாளர்கள்
அனுப்பப்பட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



