மகளைப் பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு 33 ஆண்டுகள் சிறை! 32 பிரம்படிகள்!
- THINAGAREN SANGGAREN
- 07 May, 2026
மே 7,
14 வயது மகளைப் பாலியல் வன்புணர்வு செய்ததுடன் காயப்படுத்தியக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட 40 வயது உள்ளூர் ஆடவருக்கு Pasir Mas Sesyen நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறையுடன் 32 பிரம்படிகளும் விதித்து தீர்பளித்தது. கடந்த 2022 ஜூன் முதல் 2023 ஏப்ரல் வரையில் பாதிகப்பட்ட 14 வயது சிறுமி தாயாரால் கைவிடப்பட்டதும் வளர்ப்புத் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ள 40 வயது ஆடவருடன் Tumpat நகரில் வசித்து வந்த போது 40 வயது வளர்ப்புத் தந்தை இக்கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் காவல்துறை ஆதாரங்களைச் சமர்பித்தது.
கடந்த 2025 மே மாதம் அண்டை வீட்டாரின் உதவியுடன் அதிகாலை 3 மணிக்கு 14 வயது சிறுமி மீட்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 40 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. 14 வயது சிறுமியைக் காயப்படுத்தியது பாலியல் வன்புணர்வு செய்தது ஆகிய குற்றங்களுக்காக Pasir Mas Sesyen நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறையுடன் 32 பிரம்படிகளும் விதித்து தீர்பளித்துள்ளது. பாதிகப்பட்ட சிறுமி சமூகநலக் காப்பகத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



