அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 113 Rohingya அகதிகள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 28 Jul, 2026
ஜூலை 28,
கோலாலம்பூரில் உள்ள UNHCR அலுவலகத்தை முற்றுகையிட்ட 113 Rohingya அகதிகள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார். அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து எந்தவோர் ஆவணங்களையும் காவல்துறையினர்கள் பெறவில்லை என்றும் அகதிகள் சட்டத்தின்படி அவர்களை மீண்டும் அகதிகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் Datuk Fadil Marsus தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 110 பேர் Rohingya நாட்டவர்கள் என்றும் ஒருவர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் சோமாலியா, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த இரு பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 53 குழந்தைகளும் அடங்குவர் என்பதால் அவர்களுக்கு முறையான தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார்.

முன்னதாக இவர்கள் அனைவரும் பினாங்கில் உள்ள அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்ததாகவும் நேற்று காலை இவர்கள் கோலாலம்பூர் Jalan Bukit Petaling சாலையில் உள்ள அனைத்துலக அகதிகள் தலைமை ஆணையத்திற்கு வந்ததாகவும், அலுவலகத்தில் அவர்களை அனுமதிக்க மறுத்ததால் சாலை ஓரங்களில் கூடாரமிட்டு மறியலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *