அமைதியாக இருங்கள்! Rohingya அகதிகளுக்குப் பிரதமர் அன்வார் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 28,

மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் எந்தவொரு நபர் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim எச்சரிக்கை விடுத்தார். அகதிகளாக மலேசியாவுக்குள் நுழைந்தவர்களை மலேசிய அரசு மற்ற நாடுகளைப் போல விரட்டியடிக்கவில்லை. அவர்களுக்கு அமைதியான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அரசு உதவிகளை வழங்கி வருகிறது என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் வெளிநாட்டினர்களுக்கு எதிராகக் காவல்துறையும் குடிநுழைவுத் துறையும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார். ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் அகதிகள் சட்டத்தை மலேசியா மதிக்கிறது. ஆனால் அனைத்துலக அகதிகள் சட்டம் 1951 ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடவில்லை என்பதால் அகதிகளின் மறுவாழ்வு மையங்கள் மலேசியாவில் கட்டாயம் அல்ல என Datuk Seri Anwar Ibrahim ரொஹின்யா அகதிகளுக்கு நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *