இனி 'பெரிக்காத்தான் பாரிசான் நேஷனல்' என்று கூட்டணியை அழைப்போம்! - ஹம்சா
- Shan Siva
- 22 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 22: பார்ட்டி வாசவாசன் நெகாரா (Parti
Wawasan Negara) தலைவர் ஹம்சா சைனுடின், பாரிசான் நேஷனல்
மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான
தேர்தல் ஒத்துழைப்புக்கு "பெரிக்காத்தான்
பாரிசான் நேஷனல்" (Perikatan Barisan Nasional)
என்ற பெயரை வழங்க முன்மொழிந்துள்ளார்.
நெகிரி செம்பிலான்
மாநிலத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் புரிந்துணர்வு
குறித்து, பெரிக்காத்தான்.
மற்றும் பாரிசான் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே நிலவும் குழப்பத்தைத்
தவிர்க்கவே இந்தப் பெயர் பரிந்துரைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பெல்டா புக்கிட்
ரோக்கானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஹம்சா, "மக்கள் இனி குழப்பமடையாமல் இருக்க இந்த
ஒத்துழைப்புக்கு ஒரு பெயர் வழங்க விரும்புகிறோம். நெகிரி செம்பிலானில் இதை 'பெரிக்காத்தான் பாரிசான் நேஷனல்'
என்ற
பெயரில் தொடங்குகிறோம். 'PN-BN' என்ற சொற்றொடரை பலரால் எளிதில்
புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.
இந்தப் பெயர்
தொடர்பான பரிந்துரை, இரு
தரப்பினரின் கட்சித் தலைமைகளுடனும் ஆலோசிக்கப்பட்டு பின்னர் இறுதி முடிவு
எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய தேர்தல்
புரிந்துணர்வின் கீழ், பாரிசான்
நேஷனல் 25 தொகுதிகளிலும்,
பாஸ் தலைமையிலான
பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இரு கூட்டணிகளும் ஒரே தொகுதியில் மோதாத வகையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, பாஸிலிருந்து பிரிந்த பின்னரும்
கூட்டணியில் தொடரும் பெர்சாத்து, தனது சொந்த சின்னத்தில் 24
தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தல்
ஒத்துழைப்பு, 36 தொகுதிகளிலும் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் (PH)
கூட்டணியை எதிர்கொள்கிறது.
மேலும், இந்த தேர்தல் ஒத்துழைப்பு வெற்றி
பெற்றால், நெகிரி
செம்பிலான் மாநில அரசை பாரிசான் நேஷனலே வழிநடத்தும்
என்று பெரிக்காத்தான்
நேஷனல் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக ஹம்சா தெரிவித்தார்.
கடந்தகால அரசியல்
மோதல்களின் காரணமாக, இந்த
புதிய ஒத்துழைப்பை இரு கூட்டணிகளின் அடிமட்ட உறுப்பினர்களும் இன்னும் முழுமையாகப்
புரிந்துகொள்ளவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
"ஆரம்பத்தில்
கடந்தகால பிரச்சினைகளால் சிலருக்கு ஏமாற்றம் இருந்தது. ஆனால் நேரில் சந்தித்து
பேசுவதன் மூலம் அதைத் தீர்க்க முடியும். அதனால்தான் BN-PN சந்திப்பு முன்கூட்டியே நடத்தப்பட்டது.
இனி மக்களிடம் சென்று எங்களின் நோக்கத்தை விளக்கி, தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்று ஹம்சா சைனுடின்
கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



