நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பல்! அடையாளம் கண்ட காவல்துறை!

top-news

மார்ச் 4,

நகைக்கடை ஒன்றில் முகமூடி அணிந்த இருவர் கொள்ளையடிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக Negeri Sembilan மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Ahmad Dzaffir Mohd Yussof தெரிவித்தார். நேற்று இரவு 8.45 மணிக்கு Bandar Baharu நீலாயில் உள்ள ஒரு அங்காடிக் கடையில் இக்கொள்ளை சம்பவம் நடந்ததாகவும் துப்பாக்கியுடன் இருவர் வணிகத்தலத்திற்குள் இருந்த நகைக் கடையைக் கொள்ளையடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கொள்ளையில் ஈடுபட்ட இருவரும் உடல் முழுவதையும் துணிகளால் மூடியதால் அவர்களின் அடையாளம் காணப்படவில்லை என்றும் சம்பவம் நடந்த நகைக்கடையில் தடவியல் நிபுணர்கள் ஒரு சில ஆதாரங்களைக் கண்டுப்பிடித்ததன் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் Negeri Sembilan மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Ahmad Dzaffir Mohd Yussof விளக்கமளித்தார். கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையர்களால் யாரும் தாக்கப்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

Sekumpulan individu bertopeng merompak sebuah kedai emas di kompleks beli-belah di Nilai sekitar 8.45 malam. Rakaman video menunjukkan dua suspek bersenjata mengambil barang kemas sebelum melarikan diri. Polis sedang menyiasat kejadian dan mengumpul bukti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *