ரொனால்டோ இரட்டை கோல் – அல் நஸ்ர் அதிரடி வெற்றி

top-news
FREE WEBSITE AD

ரியாத், ஏப். 4-

 Cristiano Ronaldo தனது திறமை இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்தார். அவர் அடித்த இரண்டு கோல்களின் உதவியுடன் Al Nassr அணி, Al Najma அணியை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியது.

சவுதி ப்ரோ லீக் போட்டியில் நடந்த இந்த ஆட்டம் நேற்று அதிகாலை நடைபெற்றது. 41 வயதான போர்ச்சுகல் முன்னணி வீரரான ரொனால்டோ, பிப்ரவரி மாதம் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்டிருந்தார். அவர் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு எதிரான நட்பு போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

ஆனால் மீண்டும் களமிறங்கிய அவர், இரண்டாம் பாதியில் இரு கோல்களைப் பதிவு செய்து அணிக்கு முக்கிய வெற்றியைப் பெற்றுத் தந்தார். இந்த வெற்றி, அல் நஸ்ர் அணிக்கான தொடர்ச்சியான 13ஆவது வெற்றியாகும்.

இந்நிலையில், இந்த சீசனில் 27 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்த அல் நஜ்மா அணி, இடைவேளைக்கு ஒரு நிமிடம் முன் ராகன் அல் துலாய்ஹி அடித்த கோலால் முன்னிலை பெற்றது.

எனினும், அதன் பிறகு ரொனால்டோ தலைமையிலான அல் நஸ்ர் அணி ஆட்டத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *