சொந்த சகோதரியிடம் பாலியல் வன்கொடுமை புரிந்த சகோதரன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
- Shan Siva
- 02 Jul, 2026
கோல திரெங்கானு, ஜூலை 2: 25 வயதான ஹார்ட் வேர் கடை ஊழியர் ஒருவர் மீது, தனது 16 வயது உடன் பிறந்த சகோதரியை பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கோலதிரெங்கானு அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.
நீதிபதி முகமது ஸுல் ஸகிகுதின் ஸுல்கிஃப்லி முன்னிலையில் இரு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை கோரினார்.
முதல் குற்றச்சாட்டின்படி, ஜனவரி மாதம் இரவு சுமார் 11 மணியளவில் கம்போங் தித்தியான் பாருவில் உள்ள வீட்டில், தனது சகோதரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(3)-இன் கீழ், முறையற்ற பாலியல் வன்கொடுமைக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், எட்டு முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் 10 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
இரண்டாவது குற்றச்சாட்டின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் ஜூன் 21 அன்று இரவு சுமார் 9 மணியளவில் அதே இடத்தில் பாதிக்கப்பட்டவரை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம், அதேசமயம் பிரிவு 16(1) இன் கீழ் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்படலாம். வழக்கு விசாரணைக்காக ஆகஸ்ட் 2 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



