மீண்டும் LRT-யில் சிக்கல்! ஐந்து பயணிகள் காயம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன்5: கிளானா ஜெயா LRT பாதையில் பயணித்த ரயில், டாங் வாங்கி நிலையத்திலிருந்து புறப்பட்டபோது பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதால் திடீரென நின்றது. இதில் ஐந்து பயணிகள் காயமடைந்தனர்.

ரயில் நின்றபோது, ​​நின்றுகொண்டிருந்த பயணி ஒருவர் நிலைதடுமாறி, அவர் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் இருக்கைப் பகுதிக்கு அருகில் இருந்த கண்ணாடிப் பலகையில் மோதியதாக நம்பப்படுவதாக ரேபிட் கே.எல். ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மோதலால் அந்தப் பலகை நொறுங்கியது, அதன் சிதல்கள் அருகிலிருந்த பல பயணிகள் மீது பட்டன.

காயமடைந்த ஐந்து பயணிகளில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மற்ற மூவர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்று தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

வேறு எந்தப் பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரேபிட் கே.எல். தெரிவித்துள்ளது. ரயிலில் இருந்தவர்கள் டாமாய் LRT  நிலையத்தில் இறங்கி, அடுத்த ரயிலில் தங்கள் பயணத்தைத் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

விபத்துக்குள்ளான ரயில் முழுமையான தொழில்நுட்ப ஆய்வுக்காக சேவையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *