பத்து பகாட், மூவாரில் போதைப்பொருள் வேட்டை; தம்பதியர் உட்பட மூவர் கைது!

top-news

பத்து பகாட், அக் 30: ஜொகூர் மாநிலம், பத்து பகாட் மற்றும் மூவார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், தம்பதியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதுடன், 5.2 கிலோகிராம் மெத்தம்பெத்தமின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 8.35 மணியளவில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளைக் குறிவைத்து பொது நடவடிக்கைப் படையினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

பொது நடவடிக்கைப் படையின் 6ஆவது படைப்பிரிவுத் தளபதி சூப்பிரண்டண்ட் ஷோஹைமி இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.

மூவாரில் உள்ள படைப்பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய இந்த நடவடிக்கையில், ஐந்து பிளாஸ்டிக் பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் வாகனங்களின் மொத்த மதிப்பு 4 லட்சத்து 34 ஆயிரத்து 400 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பத்து பகாட்டில் உள்ள பேரங்காடி ஒன்றின் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்திலும், மூவாரில் உள்ள கம்போங் சாராங் புவாயா லாவூட் பகுதியிலும் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

கைது செய்யப்பட்ட மூவரும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைக்காக பத்து பகாட் மாவட்டக் காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்