மோட்டார்சைக்கிளில் போதைப்பொருள் கடத்தல்! சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது!
- Shan Siva
- 27 Oct, 2026
கோலாலம்பூர், அக் 27: சிங்கப்பூரின் துவாஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 24 வயது மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், 1,924 கிராம் ஹெராயினும், 164 கிராம் மெத்தாம்பெட்டமைனும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளின் பெட்டிக்குள் மழைக்கோட்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் ஐந்து பொட்டலங்களில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிங்கப்பூரில் 15 கிராமுக்கும் அதிகமான தூய ஹெராயினை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்த குற்றத்தில் தண்டனை பெற்றால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

