நெகிரி செம்பிலான் DAP தலைவராக ஜே.அருள்குமார் நியமனம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 10: நீலாய் சட்டமன்ற உறுப்பினரும், டிஏபி உதவித் தலைவருமான ஜே .அருள் குமார், இன்று முதல் நெகிரி செம்பிலான் டிஏபி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அந்தோணி லோக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாநிலக் குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்ததாக டிஏபி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.

அருளின் நியமனம் மிகவும் நேர்மறையான முன்னேற்றமாகும். மேலும், டிஏபி ஒரு பல்லினக் கட்சி என்பதை இது நிரூபிக்கிறது. தனிநபர்களை அவர்களின் தகுதிகள் மற்றும் தலைமை தாங்கும் திறனின் அடிப்படையில்   மதிப்பிடுகிறோம் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

மாநில டிஏபி உதவித் தலைவராக இருந்த அருள், கட்சியின் அரசியலமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 1 அன்று நடந்த மாநிலத் தேர்தலில், சென்னா உட்பட இரண்டு இடங்களை டிஏபி இழந்ததற்குப் பொறுப்பேற்று, ஆகஸ்ட் 3 அன்று லோக் தனது பதவியை ராஜினாமா செய்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *