ஆலயங்களுக்கு RM 200 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது! – அமைச்சர் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 7,

இஸ்லாம் அல்லாத சமய வழிபாட்டுத் தலங்களுக்கு மடானி அரசு வழங்கும் நிதி ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதாக வீட்டு வசதி உள்ளாட்சி அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார். குறிப்பாகக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜொகூரில் உள்ள 51 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 6.41 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருப்பதாக Nga Kor Ming தெரிவித்தார். ஜொகூர் மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்தாலும் அரசு நிதி வழங்கப்படவில்லை எனும்படியான கேள்விகளைக் கேட்கும் முன்னர் இவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கிறார்களா என்பதையும் தாம் அறிய வேண்டும் என Nga Kor Ming தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மடானி அரசு இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்தவும் சீரமைக்கவும் 50 மில்லியன் நிதியை ஒதுக்கியதாகவும் மீண்டும் 2024 ஆம் ஆண்டு 50 மில்லியன் நிதியை ஒதுக்கியதாகவும் 2025 ஆம் ஆண்டு 50 மில்லியனுடன் கூடுதலாக மேலும் 50 மில்லியன் ரிங்கிட் வழங்கியிருப்பதால் இதுவரையில் மடானி அரசு இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பதாகவும் வீட்டு வசதி உள்ளாட்சி அமைச்சர் Nga Kor Ming விளக்கமளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *