குடித்துவிட்டு வாகனமோட்டுபவர்களுக்கு இனி ஆப்பு! காவல்துறை புதிய அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 11: சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கும் பொருட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு, குறிப்பாக வார இறுதி இரவுகளில் கவனம் செலுத்துமாறு, போக்குவரத்து அமலாக்கம் மற்றும் புலனாய்வுத் துறை (TEID) அனைத்து அரசுப் படைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

'ஆபரேஷன் மாபோ' திட்டத்தின் கீழ், நாடு தழுவிய அளவில் அடிக்கடி மற்றும் தீவிரமான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த உத்தரவு கோருவதாக புக்கிட் அமான் TEID இயக்குநர் டத்தோஸ்ரீ  முஹமது  ஹஸ்புல்லா அலி கூறினார்.

இந்தத் திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் வலுப்படுத்த தான் உத்தரவிட்டுள்ளதாகவும்,  இந்த நடவடிக்கைகள் வார இறுதி இரவுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, சாதாரண இரவுகளிலும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.  இருப்பினும் வார இறுதி நாட்களே முக்கியக் கவனமாக இருக்கும்  என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று இரவு  காவல்துறை பயிற்சி மையத்தின் பாதுகாப்பு அரங்கில் நடைபெற்ற 'ஆபரேஷன்  செலாமாட் 25 & 26' திட்டங்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்ற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து அரசுப் படைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு, TEID தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஹஸ்புல்லா கூறினார்.

முன்னதாக, நேற்று அதிகாலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையின் கி.மீ. 0.7-ல், மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய உள்ளூர்வாசி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அபாயகரமாக வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டதை அடுத்து, அதிகாலை 2.10 மணிக்கு அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷம்சுதீன் மமாட் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *