சீனா கிராண்ட் பிரிக்ஸ் ஸ்பிரிண்ட் போட்டியில் ஜார்ஜ் ரசல் வெற்றி
- Surendran Sumdraraj
- 14 Mar, 2026
ஷாங்காய், மார்ச் 14-
மெர்சிடீஸ் அணியின் சார்பில் போட்டியிட்ட பிரிட்டன் ஓட்டுநர் ஜார்ஜ் ரசல், சீனா கிராண்ட் பிரிக்ஸ் (GP) ஸ்பிரிண்ட் பந்தயத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார்.
முன்னணி தொடக்க நிலையான ‘போல் பொசிஷன்’- இருந்து பந்தயத்தை தொடங்கிய ரசல், 19 சுற்றுகள் கொண்ட போட்டி முழுவதும் தனது முன்னிலை நிலையைத் தக்கவைத்துக் கொண்டார். போட்டியின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்பு கார் (Safety Car) களமிறங்கியிருந்தாலும், அவர் தனது நிலையை இழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தப் போட்டியில் பெராரி அணியின் சார்ல்ஸ் லெக்லெர்க் இரண்டாம் இடத்தையும், லூயிஸ் ஹாமில்டன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் ரசல் தனது முன்னிலை புள்ளிகளை 11 ஆக உயர்த்தியுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த வாரம் நடைபெற்ற சீசனின் தொடக்கப் போட்டியான ஆஸ்திரேலியா கிராண்ட் பிரிக்ஸிலும் ரசல் முதலிடம் பிடித்திருந்தார். அந்தப் போட்டியில் மெர்சிடீஸ் அணி முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்து சிறப்பான தொடக்கத்தைப் பதிவு செய்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



