Vladimir Putin - Xi Jinping இன்று முக்கிய பேச்சுவார்த்தை

top-news
FREE WEBSITE AD

Vladimir Putin மற்றும் Xi Jinping இன்று Beijing நகரில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அமெரிக்க அதிபர் Donald Trump சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட சில நாட்களிலேயே இந்த சந்திப்பு நடைபெறுவதால் உலக அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.

ரஷியா – சீனா இடையிலான பொருளாதார, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக “Power of Siberia 2” எரிவாயு குழாய் திட்டம் தொடர்பாக விரிவான பேச்சுக்கள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

மேலும், Ukraine போர், மேற்கு நாடுகளின் தடைகள், அமெரிக்கா – சீனா உறவு மற்றும் மத்திய கிழக்கு பாதுகாப்பு சூழ்நிலை போன்ற சர்வதேச பிரச்சினைகளும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *