இராணுவத்துக்கு நம்பிக்கையும் நேர்மையும் முக்கியம்! - மாமன்னர் வலியுறுத்தினார்
- Shan Siva
- 08 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 8: இராணுவம் தனது கடமைகளைச் செய்வதில் மிக உயர்ந்த
நேர்மை மற்றும் நம்பிக்கை தரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று மாட்சிமை தங்கிய
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
நேற்று இஸ்தானா
புக்கிட் துங்குவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், சுல்தான் இப்ராஹிம் தேசிய இராணுவத் தலைவர் ஜெனரல் டத்தோ
அசான் முகமட் ஒஸ்மானுக்கு இந்தச் செய்தியை வழங்கினார்.
சுத்தமான,
வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுள்ள
நிர்வாகத்தை ஊக்குவிப்பதில் இராணுவத் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று மாமன்னர்
கூறினார்.
நாட்டின்
இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஊழல் நடைமுறைகளிலிருந்து விடுபட்ட ஒரு தொழில்முறை சக்தியாக
இராணுவம் தொடர்ந்து பொதுமக்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் பெறும் என்றும்
அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னர், பாதுகாப்பு அமைச்சகத்தில் 'இடைத்தரகர்கள்' அல்லது முகவர்கள் பற்றிய பிரச்சினையை தாம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அவர்கள் உள்ளே நுழையவே அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



