எப்.ஏ.எம். உதவி தலைவர் 3 பதவி: டத்தோ என். சாரான் வெற்றி
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
கோலாலம்பூர், செப். 17-
மலேசிய கால்பந்து சங்கத்தின் (FAM) துணைத் தலைவர் 3 பதவிக்கான தேர்தலில் டத்தோ என். சாரான் வெற்றி பெற்றார்.
இன்று நடைபெற்ற எப்.ஏ.எம். சிறப்பு காங்கிரஸில் இடம்பெற்ற தேர்தலில், சாரான் மொத்தம் 18 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அஃபிசால் அபு ஒத்மான் 7 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் 11 வாக்குகள் பெரும்பான்மையுடன் சாரான் துணைத் தலைவர் 3 பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் நாட்டின் கால்பந்து நிர்வாக அமைப்பான எப்.ஏ.எம்மின் உயர்மட்ட தலைமைக் குழுவில் அவர் தொடர்ந்து இடம்பெறுகிறார்.
சாரான் இதற்கு முன்னரும் மாநில மற்றும் தேசிய அளவிலான கால்பந்து நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவர். எப்.ஏ.எம். நிர்வாகக் குழுவிலும் அவர் ஏற்கனவே உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



