சபா தோல்வி, பக்காத்தானுக்கு ஆபத்து! அன்வாரின் வியூகம் தோல்வியா? RAFIZI எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 07 Dec, 2025
டிசம்பர் 7,
பக்காத்தான் கூட்டணி சபாவின் மாநிலங்கவை தேர்தலில் அடைந்திருக்கும் தோல்விக்கு யார் காரணமாக இருந்தாலும் பக்காத்தான் தலைமை விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli வலியுறுத்தினார். தேசிய கட்சிகள் குறிப்பாக ஆட்சியில் இருக்கும் கட்சிகள் மாநிலங்கவை சட்டமன்றத்தில் தோல்வி அடைந்திருப்பது சபா மக்கள் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதை உணர்த்துவதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். பி.கே.ஆர் கட்சியும் அதன் நெருங்கிய பங்காளி கட்சியான டி.ஏ.பியும் சபாவில் அடைந்திருக்கும் தோல்வி அவர்களின் மத்திய ஆட்சியைப் பாதிக்கும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
பக்காத்தான் கூட்டணியில் பிரச்சாரங்களில் பிரதமராக இருக்கும் அன்வார் நேரடியாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அது மக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தினாலும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. பி.கே.ஆர் கட்சி 12 சட்டமன்றங்களில் போட்டியிட்டும் 1 சட்டமன்றத்தில் மட்டுமே வென்றது. டி.ஏ.பி கட்சி போட்டியிட்ட அனைத்து சட்டமன்றங்களிலும் தோல்வி அடைந்தது. ஆனால் சபா மாநிலக் கட்சிகளாக வாரிசான் 25 சட்டமன்றங்களையும் GRS கட்சி 29 சட்டமன்றங்களையும் வென்றுள்ளது. இது சபா மக்களுக்குப் பக்காத்தான் கூட்டணி மீது அரசாங்கத்தின் மீதுமான வெளிப்படையான எதிர்ப்பைக் காட்டியிருப்பதாக Datuk Seri Rafizi Ramli குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



