சபரிமலையில் தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் விவகாரம்: விசாரணையில் திடீர் திருப்பம்

top-news
FREE WEBSITE AD

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலின் மேற்பகுதியில் தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் சம்பவம் தொடர்பான விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை சன்னிதானம் பகுதி மிகுந்த பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கடலோர காவல் படைக்கு சேர்ந்த ஹெலிகாப்டர் அனுமதியின்றி குறைந்த உயரத்தில் பறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சம்பவம் நடைபெற்றபோது ஹெலிகாப்டர் கோவில் மேல் சில விநாடிகள் மிதந்து இருந்ததாகவும், அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

பம்பா போலீசார் கேரள போலீஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடலோர காவல் படை தரப்பில் இது வழக்கமான பயிற்சி பறப்பு என்றும், மோசமான வானிலை காரணமாக பாதை மாறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *