விதிமீறும் வழிபாட்டிடங்கள் விவகாரம்: அமைச்சரவைக்கு நாளை விளக்கம் அளிக்கிறார் சைபுதீன்
- Tamil Malar (Reporter)
- 12 Feb, 2026
புத்ராஜெயா, பிப். 12-
விதிமுறைகளை பின்பற்றாத வழிபாட்டிடங்கள் தொடர்பான உண்மையான நிலவரம் குறித்து, குறிப்பாக ரவாங் பகுதியில் ஒரு கோவில் தொடர்பான ஊடுருவல் விவகாரம் குறித்து, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசூதின் இஸ்மாயில் நாளை அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.
அவர் கூறுகையில், இந்த விளக்கத்தில் சம்பவத்தில் நடந்த உண்மை நிலவரம், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை முழுமையாக இடம்பெறும் என்றார்.
“நாளை அமைச்சரவைக்கு உண்மையில் என்ன நடந்தது, இதில் யார் யார் தொடர்புடையவர்கள், காவல்துறை எவ்வாறு நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றது என்பதையும் நான் தெரிவிப்பேன்.
ஏனெனில் சில நேரங்களில் காவல்துறையின் நடவடிக்கை ஒரே கோணத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது. உதாரணமாக, சில தரப்பினர் இந்த விவகாரத்தை முன்வைத்து பேரணி நடத்தினால், அதற்கு நடவடிக்கை எடுக்கும்போது அரசு தனிமனித சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதிக்கவில்லை என்று பார்க்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படுவதுடன், சட்டத்திற்குள் ஒழுங்கை பேணுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



