போக்குவரத்து சம்மன் பாக்கி இருந்தாலும் புடி மடானி ரோன்95 மானியம் ரத்தாகாது – அந்தோணி லோக் தெளிவு

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், டிச. 9-

போக்குவரத்து சம்மன் பாக்கி இருப்பவர்கள் BUDI MADANI RON95 (BUDI95) தனிநபர் பெட்ரோல் மானியத்தை இழக்க நேரிடும் என்று வெளியான சில ஊடகச் செய்திகளை போக்குவரத்து அமைச்சு மறுத்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் அந்தோணி லோக் இன்று வெளியிட்ட அறிக்கையில், “போக்குவரத்து சம்மன் பாக்கி, BUDI95 மானியத் தகுதி ஆகியவை இரண்டும் முற்றிலும் தனித்தனி விஷயங்கள். ஒன்றுக்கொன்று தானாக இணைக்கப்படவோ அல்லது ஒன்று மற்றொன்றை ரத்து செய்யவோ கிடையாது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

சில ஊடகங்களில் “சம்மன் செலுத்தவில்லை என்றால் BUDI95 மானியம் நிறுத்தப்படும்” என்ற தவறான தகவல் பரவியதை அடுத்து, இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

“சம்மன் பாக்கி, பெட்ரோல் மானியத் தகுதி ஆகியவை இரண்டு வெவ்வேறு அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் தனித்தனி பொறிமுறைகள். எனவே, சம்மன் பாக்கி இருந்தாலும் BUDI95 மானியம் தொடர்ந்து கிடைக்கும்” என்று அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *