மலேசியாவில் ஹமாஸ் இயக்கத்திற்கு பயிற்சியா?! - அன்வார் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஜூலை 23: ஹமாஸ் உறுப்பினர்கள் மலேசியாவில் பயிற்சி பெற்றதாகவும், கூட்டாட்சி அரசாங்கம் "யூதர்களைக் குறிவைக்கும் அதே வேளையில் பயங்கரவாதிகளை வரவேற்றது" என்றும் எட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். இது ஆதாரமற்றது, என்று அவர் நேற்று  செய்தியாளர்களிடம் கூறினார்.

புத்ராஜெயாவின் கொள்கைப்படி இஸ்ரேலிய குடிமக்கள் மலேசியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்ததால், மலேசியாவுடனான தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு வாஷிங்டனை முன்னதாக வலியுறுத்தியிருந்த அந்த எட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தங்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

அமெரிக்கா, ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்துகிறது. ஒரு ஹமாஸ் தலைவருடனான தனது சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குத் தாம் தெரிவித்ததாகவும் அன்வார் கூறினார்.

ஹமாஸுடனான இந்த உறவில் அசாதாரணமான எதுவும் இல்லை என்று  அவர் தெரிவித்தார். மே 2024-ல், கத்தாருக்கு மேற்கொண்ட ஒரு பணிப் பயணத்தின்போது அன்வார், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவைச் சந்தித்தார். அப்போது, ​​ஏப்ரல் மாதம் நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்மாயிலின் குடும்ப உறுப்பினர்கள் பலரின் இழப்பிற்காக இஸ்மாயிலுக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *