உகாதி கொண்டாட்டம்
- Surendran Sumdraraj
- 18 Mar, 2026
உகாதி (Ugadi) என்பது தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ஆகும், இது சித்திரை மாதத்தின் (சந்திர நாட்காட்டி) முதல் நாளில், பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகக் கருதப்படும் நன்னாளில், வசந்த காலத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. 'யுக' (காலம்/யுகம்) மற்றும் 'ஆதி' (தொடக்க) என்ற சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து உருவான இது, புதிய தொடக்கத்தையும், வெற்றியையும் குறிக்கும், பிரதானமாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்தின் யுகாதி பண்டிகையானது 2026 மார்ச் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உகாதி என்பது யுகாதி என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது ஆகும். “யுக்” என்றால் வயது என்றும் “ஆதி” என்றால் ஆரம்பம் என்று பொருளை தருகிறது. அதாவது யுகாதி என்ற சொல்லுக்கு புதிய ஆண்டின் துவக்கம் என்பது பொருள் ஆகும்.
யுகாதி பண்டிகையின் சிறப்பு
யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட மறுநாள் தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி.பூரண பிரதமை திதி தினமே யுகாதி திருநாள் என்று சொல்லப்படுகிறது.
யுகாதி பண்டிகை வரலாறு:
இந்து புராணம் படி பிரம்ம தேவன் இந்த யுகாதி நாளில் தான் இவ்வுலகை படைக்கும் வேலையை தொடங்கினார் என்று பிரம்ம புராணத்தில் சொல்லப்படுகிறது. யுகாதி பண்டிகையை தெற்கு இந்தியா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். யுகா என்றால் யுகம் அல்லது வயது அல்லது ஆண்டு என்றும், ஆதி என்றால் துவக்கம் என்றும் பொருள். புதிய வாழ்க்கை அல்லது யுகத்தை புதிதாக துவங்குவதற்கான நாள் என்பது இதன் பொருஇருக்கிறது.சித்திரை மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்படுகிறது. இன்றைய சுப நாளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். அதனால் தான் யுகாதி பண்டிகை மிகவும் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சைத்ர மாதத்தின் முதல் வசந்த காலத்தின் பிறப்பு என்று சொல்லப்படுகிறது., இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. யுகாதி பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையிலே நீராடி விடுவார்கள். அதன் பிறகு வீட்டிற்கு முன்பு மாவிலை தோரணம் கட்டி வண்ண கோலமிட்டு அலங்கரிப்வேண்டும். காலையில் எழுந்து நீராடி தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். செய்த படையலை ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குதல் வேண்டும். இதுபோல யுகாதி பண்டிகை அன்று செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
உகாதி பச்சடி:
யுகாதி பண்டிகை தினத்தன்று அனைத்து வீடுகளிலும் யுகாதி பச்சடி செய்வார்கள். இந்த யுகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.
பஞ்சாக சரவணம்:
வீட்டினுள் உள்ள அனைவரின் வருங்காலத்தை கணிப்பதற்காக, புகழ் பெற்ற இந்த மரபு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உகாதி தினத்தன்று ஒரு ஜோதிடரை வீட்டிற்கு வரவழைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.
கவி சம்மேளனம்:
கவி சம்மேளனம் என்பது வட இந்தியாவின் ஹிந்தி பெல்ட்டில் உள்ள கவிஞர்களின் கூட்டம் ஆகும்.
யுகாதி பண்டிகை தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். மேலும் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க சைவ உணவுகளை சமைத்து போடுவதும் ஒரு வழக்கமாகும்.
யுகாதி ஸ்லோகம்:
சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம்
யுகாதி பண்டிகையன்று மேல் உள்ள ஸ்லோகத்தினை சொல்லி வெல்லம் கலந்த வேப்பம் பூ பச்சிடியை ஆண்கள், பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.
:- லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



