கீர்த்தி சுரேஷை முந்தி இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்
- Surendran Sumdraraj
- 15 Apr, 2026
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கேரளத்தைச் சேர்ந்த பிரபலங்களில் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவராக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷை முந்தி தற்போது சஞ்சு சாம்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம்பிடித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 1.88 கோடி பின்தொடர்பவர்கள் இருந்து வந்த நிலையில், அந்த எண்ணிக்கையைத் தற்போது சஞ்சு சாம்சன் கடந்து சென்றுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு டி20 உலகக்கோப்பைக்கு முன்பு சுமார் 1.4 கோடி பின்தொடர்பவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உலகக்கோப்பை போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டம் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகள் காரணமாக அவரது ரசிகர் பட்டாளம் வேகமாக அதிகரித்தது. இதன் விளைவாக அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து தற்போது 1.91 கோடியை எட்டியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



