அம்னோவைக் குறிவைக்கும் சனுசியின் குற்றச்சாட்டுகள் அவரது அச்சத்தைக் காட்டுகிறது – மாட்ஸிர் காலிட்

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், மார்ச் 14-

கெடா மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி அடிக்கடி அம்னோ கட்சியைக் குறிவைத்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, அந்தக் கட்சியின் செல்வாக்கை குறித்து அவர் கொண்டுள்ள அச்சத்தினாலேயே ஏற்பட்டதாக அம்னோ கெடா மாநில இணைப்பு குழு தலைவர் டத்தோ ஸ்ரீ மாட்ஸிர் காலிட் தெரிவித்துள்ளார்.

அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி முன்வைத்த “ருமா பங்சா” முயற்சி, அம்னோ மீண்டும் ‘அபாங் பெசார்’ ஆக வர முயற்சிப்பதாகச் சனுசி கூறியது, அவர் ஒற்றுமையை உருவாக்க முயற்சிப்பதற்குப் பதிலாக வெறுப்பை தூண்டும் அரசியல் கருத்துக்களை முன்வைப்பதில் ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

“ருமா பங்சா” என்ற கருத்தின் உண்மையான நோக்கம், முன்பு அம்னோவில் இருந்த உறுப்பினர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பி வர வேண்டும் என்ற அழைப்பாகும் என்றும் மாட்சிர் விளக்கினார்.

மேலும், இந்த முயற்சி மலாய் சமூகத்தை ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பாகவும், மலாய் மக்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்து விவாதிக்கக்கூடிய ஒரு தளமாகவும் செயல்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

மலாய் சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி முன்வைக்கப்பட்டதாகவும், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மலாய் மக்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே இதன் பிரதான குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *