சனூசிக்கு எதிராக விசாரணை! காவல்துறை நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 26,

கெடா மாநில மெந்திரி பெசாரும் பெரிக்காத்தான் தேர்தல் குழு தலைவருமான DATUK SERI Sanusi Norக்கு எதிராகக் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறை தலைவர் Alzafny Ahmad தெரிவித்தார். சீனர்களுக்குச் சீனா நாடு உள்ளது. இந்தியர்களுக்கு இந்தியா உள்ளது. மலாய்க்காரர்களுக்கு தானா மெலாயு மட்டுமே உள்ளது என பல்லினச் சமூகத்திற்கு எதிராகப் பிராச்சாரம் மேற்கொண்டது குறித்து இதுவரையில் 16 போலிஸ் புகார்களைக் காவல்துறை பெற்றுள்ளதாகவும் Alzafny Ahmad தெரிவித்தார்.

பொது அமைதிக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் கருத்துகள் பகிர்ந்த குற்றத்திற்காக 505 ஆவது தண்டனைச் சட்டத்திலும் தேர்தல் பிரச்சாரச் சட்ட விதி மீறிய குற்றத்திற்காகவும்
DATUK SERI Sanusi Nor விசாரிக்கப்படுவார் என நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறை தலைவர் Alzafny Ahmad தெரிவித்தார் சனூசிக்கு எதிராக இதுவரையில் 16 புகார்கள் பெற்றுள்ளதாகவும் 11 புகார்கள் ஆதாரத்துடன் இருப்பதாகவும் நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறை தலைவர் Alzafny Ahmad தெரிவித்தார். நெகிரி செம்பிலான் தேர்தல் பிரச்சாரத்தில், சட்டத்தை மீறியதாக மொத்தாம் 345 போலிஸ் புகார்களைக் காவல்துறை பெற்றிருப்பதாகவும் 322 புகார்கள் விசாரிக்கப்பட்டு அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறை தலைவர் Alzafny Ahmad தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *