ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்தது மலேசிய கப்பல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 7-

மத்திய கிழக்கு பதற்ற நிலைமையால் ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த மலேசியாவின் ஏழு வர்த்தக கப்பல்களில் ஒன்றுக்கு தற்போது பாதுகாப்பான வழிச்செலுத்தல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சுஉறுதிப்படுத்தியுள்ளது.

விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில், அந்தக் கப்பல் தற்போது தனது இறுதி இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதகமான முன்னேற்றம், உயர்மட்ட தூதரக பேச்சுவார்த்தைகளின் விளைவாக ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஈரான் தலைவர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோருக்கு இடையில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற தொலைபேசி உரையாடலும், வெளிநாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் மற்றும் அவரது ஈரான் இணை அமைச்சர் அப்பாஸ் அறாக்சி இடையேயான மார்ச் 24ஆம் தேதியிலான பேச்சுவார்த்தையும் முக்கிய பங்காற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *