பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்த வான் அவசரநிலை மேலாண்மை அவசியம் – அகமட் ஜாஹிட்

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஜூலை 27-

பேரிடர் மற்றும் அவசரநிலை சூழல்களில் உயிரிழப்புகளைத் தவிர்க்க, அனைத்து தொடர்புடைய அரசுத் துறைகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கும் வான் பேரிடர் மேலாண்மை அமைப்பை மலேசியா உருவாக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

ஒரே முறை, ஒரே கட்டளை மற்றும் ஒரே செயல்பாடு என்ற அணுகுமுறையின்கீழ் அனைத்து அமைப்புகளும் செயல்படுவது அவசியம் என்றும், இதன் மூலம் குழப்பம், தாமதம் மற்றும் தனித்தனியாக செயல்படும் பண்பாட்டைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

அவசரநிலை ஏற்படும் ஒவ்வொரு தருணமும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு மிகவும் முக்கியமானது என்பதால், அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

“உண்மையான நெருக்கடி ஏற்பட்ட பிறகே நமது உத்தரவுகள் தெளிவானவையா, தகவல் தொடர்பு திறம்பட செயல்படுகிறதா, அனைத்து அமைப்புகளும் ஒரே திசையில் இயங்குகின்றனவா என்பதைச் சோதிக்கக் கூடாது,” என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *