ரோஸ்மாவுக்கு எதிரான வழக்கில் வெற்றி; “எனக்கு நீதி கிடைத்தது” – சமர் ஹலிமே

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12 –

ஆடம்பர நகைகள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூருக்கு எதிராக RM67.5 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, Global Royalty Trading SAL நிறுவனத்தின் நிறுவனர் சமர் ஹலிமே தனது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

லெபனானில் பிறந்த 51 வயதான தொழிலதிபரான சமர் ஹலிமே, கடந்த எட்டு ஆண்டுகளாக நீடித்து வந்த சட்டப் போராட்டத்திற்கு இந்தத் தீர்ப்பு முக்கியமான நீதி கிடைத்த தருணமாக அமைந்துள்ளதாகக் கூறினார்.

மேலும், இந்தத் தீர்ப்பு மலேசிய நீதித்துறையின் சுதந்திரத்திலும் நேர்மையிலும் தமக்கு இருந்த நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்தத் தீர்ப்பால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். மலேசிய நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தனது சுயாதீனத்தையும் நியாயத்தையும் நிரூபித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

“தீர்ப்பின் விவரங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. பல ஆண்டுகளாக என் மீது சுமத்தப்பட்டிருந்த சந்தேகங்களுக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனது பெயருக்கு நீதி கிடைத்துள்ளது என்ற உணர்வுடன் இருக்கிறேன்,” என்றும் சமர் ஹலிமே தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *