டாக்டர் முகமது அக்மால் எதிர்காலம் – இன்று மாலை ஸாஹிட்டுடன் சந்திப்பு

top-news

கோலாலம்பூர், ஜன. 13-

அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் பதவியில் இருந்து டத்தோ டாக்டர் முகமது அக்மால் சாலே விலக உள்ளார் என்ற வதந்திகள் கடந்த வாரம் முதல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த முடிவு குறித்து தமக்கு தனிப்பட்ட முறையில் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று அம்னோ  தலைவர் டத்தோ ஶ்ரீ  டாக்டர் அக்மத் ஸாஹிட்  ஹமிடி தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாநில ஆட்சிக் குழு  தொடர்பான எந்த முடிவும் தமக்கு நேரடியாகத்  தெரிவிக்கப்படவில்லை என்றும் டாக்டர் முகமது அக்மால் தனது அரசியல் எதிர்காலம் குறித்து இன்று மாலை நடைபெறும் சந்திப்பின் போது மட்டுமே தமக்கு விளக்குவார் என்றும் ஸாஹிட் கூறினார்.

“அவர் இன்று மாலை என்னைச் சந்திப்பார். அவர் எந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறித்து எனக்கு தற்போது எதுவும் தெரியாது,” என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் பதவியிலிருந்து  தாம்  விலகலாம் என டாக்டர் முகமது அக்மால் வெளிப்படையான அறிகுறிகளை வழங்கியிருந்தார். இதன் காரணமாக, அவரது அரசியல் நிலை,  எதிர்காலம் குறித்து கட்சிக்குள் மட்டுமின்றி தேசிய அரசியல் வட்டாரங்களிலும் பெரும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *