லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பது இன்னும் சாத்தியமே – அசிசுல்ஹஸ்னி அவாங்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 8-

மலேசியாவின் பிரபல  சைக்கிள் வீரர் டத்தோ அசிசுல்ஹஸ்னி அவாங், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் (LA28) பங்கேற்கும் தனது கனவு இன்னும் முடிவுக்கு வரவில்லை என தெரிவித்தார். இருப்பினும், அதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன் பல அம்சங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

38 வயதான இந்த அனுபவம் மிக்க சைக்கிள் வீரர், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற UCI தடம் சைக்கிள் உலகக் கோப்பை போட்டியில் கெய்ரின் பிரிவில் வெற்றி பெற்று மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த வெற்றி மூலம், உலக தரத்திலான போட்டிகளில் தாம் இன்னும் போட்டியிடும் திறன் கொண்டவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

இந்த போட்டியில் உலகின் முன்னணி சைக்கிள் வீரர்களையும் அவர் தோற்கடித்தார். குறிப்பாக, பிரிட்டனின் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேத்யூ ரிச்சர்ட்சனை அவர் வீழ்த்தியது இந்த வெற்றியை மேலும் சிறப்பாக்கியது.

இறுதிப் போட்டியை நினைவுகூர்ந்த அசிசுல்ஹஸ்னி, ஆரம்பத்தில் தன்னுடைய ஓட்டம் சிறப்பாக அமையவில்லை என கூறினார். ஆனால் போட்டியின் நடுப்பகுதியில் சில சிறிய மாற்றங்களை செய்து, இறுதி தருணத்தில் ரிச்சர்ட்சனை முந்தி வெற்றியை கைப்பற்ற முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *